
நான் நிருபர் அல்ல, ஆசிரியர் - மஹிந்த ராஜபக்ஷ
ஊடகவியலாளர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்த நாட்டை கையாளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ´அசிதிசி காப்புறுதி´ வழங்கும் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (02) இடம்பெற்றது.
குறித்தத நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று ஊடகங்களில் காட்டப்படுவதை பயன்படுத்தி இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
´ஊடகங்களால் அரசாங்கம் அமைக்க முடியும். ஒரு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முடியும். ஆனால் ஊடகங்களால் அரசாங்கங்களை பாதுகாக்க முடியாது. அரசை நடத்துபவர்களால்தான் அரசை பாதுகாக்க முடியும். ஊடகங்கள் அரசாங்கத்தைப் பாதுகாக்கப் போகிறது என்றால், ஊடகங்களுக்கு இதனைவிட அதிக காப்புறுதி வழங்கப்பட வேண்டும், ´என்று தெரிவித்த கௌரவ பிரதமர், ´இதனை ஊடகவியலாளர்கள் புரிந்துக் கொண்டதற்கு எம்மவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்´ எனக் குறிப்பிட்டார்.
காப்புறுதி பயனாளர்களான ஐந்து ஊடகவியலாளர்களுக்கு கௌரவ பிரதமரினால் காப்புறுதி பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட அமைச்சர்களும் காப்புறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அசிதிசி காப்புறுதி ஊடாக சுமார் 3,000 ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி பெற்றுக்கொடுக்க இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.