Category:
Created:
Updated:
கொரோனா வைரஸின் புதிய திரிபான ´ஒமிக்ரோன் வைரஸ்´ மத்திய கிழக்கிலும் இனங்காணப்பட்டுள்ளது. வட ஆபிரிக்காவிலிருந்து சவுதி அரேபியா திரும்பிய நபர் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவரும் அவருடன் தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் முதல் முதலில் இனங்காணப்பட்ட குறித்த வைரஸ் ஒரு வார காலப்பகுதியில் 14 இற்கு நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸானது கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த அல்பா, பீற்றா, காமா, டெல்டா போன்ற வைரஸ்களை விட பயங்கரமானதாகும். இது விரைவாக பரவக்கூடிய தன்மை கொண்டது.