சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8216 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இந்தியர்களின் திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது - எலான் மஸ்க்

காலை கண் விழிப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை நாம் பல டிஜிட்டல் தளங்ளை உபயோகிக்க வேண்டி உள்ளது. கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்  போன்றவற்றை  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

 

டிஜிட்டல் தளங்களை நிர்வகிப்பதில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்கள் உலகளவில் சாதனை படைத்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பல தொழில்நுட்ப சக்திகளின் வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

 

மைக்ரோசாப்ட், கூகுள், ஷாப்பிங்கிற்கு நாம் பயன்படுத்தும் மாஸ்டர் கார்டுகள் வரை, வாழ்க்கையை எளிதாக்கியுள்ள  கண்டுபிடிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களில் இந்தியர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர்.

 

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலாளராக  ஜேக் டார்சி நேற்று பதவி விலக, அதற்கான இடத்தில் அமர உள்ளார்  இந்தியரான பரக் அகர்வால். முக்கிய சோஷியல் மீடியாவான டுவிட்டரை இனி நிர்வகிக்கப் போவது ஒரு இந்தியர் என்பது, உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, உலகத்தையே தன் கைக்குள் வைத்திருக்கும் சில முக்கிய நிறுவனங்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 

 

தொழில்நுட்ப உலகில் இந்தியர்களின் வியத்தகு வெற்றி ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. உச்ச வெற்றிகளை அடைந்த இந்தியர்கள் சிலர் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

சுந்தர் பிச்சை சென்னை அசோக் நகரில் இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ந்தவர். ஆகஸ்ட், 2015 ஆம் ஆண்டு கூகுள் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். 46 வயதான அவர், காரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் படித்தார். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் செமிகண்டக்டர்ஸ் இயற்பியலில் படிக்க உதவித்தொகை பெற்றார்.

 

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் தனது எம்பிஏ படிப்பை முடித்தார். பின்னர்  மெக்கின்சி  நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். அவர் 2004 ஆம் ஆண்டில் கூகுளில் சேர்ந்தார் மற்றும் கூகுள் குரோம் ஓஎஸ் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்ட முக்கிய தயாரிப்புகளுக்கான தயாரிப்பு மேலாண்மை மற்றும் புதுமை முயற்சிகளுக்கு இவர் தலைமை தாங்கி உள்ளார்.

 

51 வயதாகும் சத்யா நாடெல்லா, பிப்ரவரி 2014 இல் மைக்ரோசாப்ட் தலைவராக நியமிக்கப்பட்டார். 22 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மைக்ரோசாப்டின் கிளவுட் மற்றும் எண்டர்பிரைஸ் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

 

ஹைதராபாத்தில் பிறந்த இவர் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அதன் பிறகு விஸ்கான்சின், மில்வாக்கி பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏவும் செய்தார்.

 

இந்திரா நூயி இந்திய அமெரிக்க வணிக நிர்வாகியான இவர் தற்போது உலகின் இரண்டாவது பெரிய உணவு மற்றும் குளிர்பான வணிகமான பெப்சியின் தலைவராக பணியாற்றுகிறார். நடுத்தர தமிழ் பேசும் இந்தியக் குடும்பத்தில் பிறந்த நூயி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

 

சாந்தனு நாராயண் இந்திய அமெரிக்க வணிக நிர்வாகியான இவர்  1998 ஆம் ஆண்டில் அடோப் நிறுவனத்தில் உலகளாவிய தயாரிப்பு ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவராக சேர்ந்தார். பின்னர் நிர்வாக துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் .இறுதியாக நவம்பர் 2007 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்த இவரது  தாயார் அமெரிக்க இலக்கிய ஆசிரியராவர். அவரது தந்தை ஐதராபாத்தில் பிளாஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நாராயண் இந்தியாவில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். மேலும் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், பவுலிங் கிரீன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் எம்எஸ் பட்டமும் பெற்றவர்.

 

அஜய்பால் சிங் இந்திய சீக்கிய அமெரிக்க வணிக நிர்வாகியான இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு முதல்  மாஸ்டர்க்கார்ட்  நிறுவனத்தின் தலைவராக பணியாற்றுகிறார். 

 

ராஜீவ் சூரி சிங்கப்பூர் இந்திய வணிக நிர்வாகியான இவர்  எந்தவொரு எம்பிஏ பட்டமும் இல்லாமல் வணிகத்தில் உயரங்களை எட்டிய உயர் நிறுவன நிர்வாகிகளில் இவரும் ஒருவர். 1995 ஆம் ஆண்டு நோக்கியாவில் சேர்ந்த இவர் நிறுவனத்தின் தலைமை செயலாளராக ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

 

பின்லாந்தின் எஸ்பூவில் வசிக்கிறார். மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச அனுபவத்தைக் கொண்டவர். உத்தி, தயாரிப்பு சந்தைப்படுத்தல், விற்பனை போன்ற பல்வேறு நிலைகளிலும் பணியாற்றி உள்ளார்.

 

ஆனால் இவ்வளவு இந்தியர்கள்  உலக அளவில் தகவல் தொழி நுட்ப நிறுவனங்களில் பணியாற்றினாலும்  பயன்டைவது என்னவோ அமெரிக்காதான். 

 

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலாளராக பரக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் "இந்தியர்களின்  திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

  • 671
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads