
கிராம மட்ட அமைப்புகளின் பங்கு பற்றுதல் இன்றி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில்19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலை ஒன்றுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இன்றைய தினம் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிராம மட்ட அமைப்புகளின் பங்கு பற்றுதல் இன்றி அதாவது கிராம அபிவிருத்திச் சங்கம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பாடசாலை சமூகம் கிராம மட்ட அமைப்புகளின் எந்த பங்குதலுமின்றி குறித்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.குறித்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் இந்த மதுபான சாலை அமைக்க உள்ள பகுதிக்கு அன்மித்த கிராமங்களில் அதிகளவில் மக்கள் வாழும் கிராமங்கள் காணப்படும் நிலையில் குறிப்பிட்ட ஒரு சிலரின் பங்குபற்றுதலுடன் அரசியல் தலையீட்டின் காரணமாக எதிர்ப்பு நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுமை குறிப்பிடத்தக்கது.