
ஒரு நாள் முழுவதும் கடலில் தத்தளித்த முதியவர்
ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயதான முதியவர், சுமார் 22 மணி நேரம் கடலில் அலைந்து தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்படுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நபர் கடந்த சனிக்கிழமை அன்று ஜப்பானின் தென் மேற்கு ககோஷிமா மாகாணத்தில் இருந்து யகுஷிமா தீவுக்கு பயணித்துக்கொண்டு இருந்துள்ளார். செல்லும் வழியில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. நடுக்கடலில் படகு மூழ்கத் தொடங்கியதால் அதன் என்ஜின் பகுதியை பற்றிக் கொண்டு உயிர் தப்பிய அதிசய மனிதராக மாறியுள்ளார்.
அவர் அந்த தீவில் இருந்த அவருடைய நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்த மீட்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட ஒருநாள் வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இறுதியில் அவரை கண்டுபிடித்து பத்திரமாக கரை சேர்த்துள்ளனர்.
அவர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த போதும் பிளாஸ்டிக் ஷீட்டை தன் உடலைச் சுற்றிக்கொண்டு அதன்மூலம் உடலுக்கு தேவையான வெப்பத்தை கொடுத்துள்ளார். இதனால் அவர் உயிர் தப்பியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நடுக்கடலில் படகு மூழ்கத் தொடங்கியதால் அதன் என்ஜின் பகுதியை பற்றிக் கொண்டு உயிர் தப்பிய முதியவரை அதிசய மனிதராகவே நினைக்கத் தோன்றுகிறது.