சினிமா செய்திகள்
மகேஷ்பாபுவுக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி
மகேஷ்பாபு நடிக்க இருக்கும் அண்ணன் தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் மகேஷ்பாபுவும் அவருக்கு தங்கையாக நடிக்க பிரபல நடிகை சாய் பல்லவியும் ஒப்புக் கொண்
'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் டீசர் வெளியானது
கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் தமிழில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுக
ஓடிடி தளத்தில் வெளியாகும் திரிஷா படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் ஹேய் ஜுட் என்ற மலையாள திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நாய
பிகினி உடையில் கவர்ச்சிக் காட்டிய ஜான்வி கபூர்
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை
தேள் - திரைப்பட விமர்சனம்
கடன் வாங்குவதும் தப்பு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தப்பு என்பதை உணர்த்தும் வகையில் ‘தேள்'  படத்தின் கதை அமைந்திருக்கிறது.இந்த படத்தில் பிரபுதேவா ச
'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்த
மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதும
முன்னழகை காட்டிய ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி,
தனுஷ் ஐஸ்வர்யா திருமணவாழ்க்கையில் இருந்து பிரிந்தனர்
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். பின்னர்
கொரோனாவில் இருந்து மீண்டார் கீர்த்தி சுரேஷ்
முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு கடந்த 11-ம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்
குட்டை டவுசர் அணிந்து கவர்ச்சிக் காட்டும் ஆத்மிகா
 ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கா
குனிந்தபடி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும்
Ads
 ·   · 2654 news
 •  · 2 friends
 •  · 6 followers

குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் - மோடி

இந்திய அரசியலமைப்பு தினம் நாடாளுமன்ற  மைய மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

 

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, இன்றைய நாள் நாடாளுமன்றத்தை  வணங்க வேண்டிய நாள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நமக்கு வழங்கிய தலைவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து கொள்கிறேன். 

 

நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல. பெரும் பாரம்பரியம் பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. 1950க்கு பிறகு அரசியல்சாசன தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், சிலர் அதனை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாள் கொண்டாடபட வேண்டும்.

 

அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. அம்பேத்கரின் சேவையை சிலர் வெளிப்படையாக பாராட்டத் தயங்குவது வேதனை அளிக்கிறது. அம்பேத்கரின் சேவையை அங்கீகரிக்க மறுப்பவர்களால் எப்படி இந்த தேசத்தை காப்பாற்ற முடியும்? அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்.

 

நம்மை நாமே ஆள வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஊழலுக்காக தண்டனை பெறுபவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.  

 

இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது ஜனநாயக மதிப்பீடுகளை இழந்துவிட்டன என பிரதமர் மோடி பேசினார்.

 

 

0 0 0 0 0 0
 • 213
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads