Category:
Created:
Updated:
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடு நகர் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை நடைபெறுவதாக தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய 25.11.2021 இன்றைய தினம் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டவிரோத கசிப்பு விற்பனையிலிடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.இதேவேளை ஊழவனுர் பகுதியிலும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து 33 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரம் பொலிஸ் விசாரனைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.