Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடல் பகுதியில் இன்று (23.11.2021 காலை சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சடலம் ஆணொருவரினது என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரனைகளை பூநகரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.