Ads
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளதால் மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பியுள்ளன.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன்காரணமாக மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் கனமழை பெய்தால் உடனடியாக தண்ணீர் தேங்கி, இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடும்.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
Info
Ads
Latest News
Ads