அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்தது இல்லை - துரைமுருகன்
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்த பின்பு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில், தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓ.பி.எஸ் ஒருநாள் கூட பார்வையிடவில்லை; இப்போது போராட்டம் நடத்துகிறார்களா?
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை. முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும் - ஓ பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை. 80 வயதிலும் நான் நேரில்சென்று ஆய்வு செய்துள்ளேன்.
30 ஆண்டு சராசரி கணக்கீட்டு படி நவ.30ம் தேதி முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கலாம் என்றும் அவர் கூறினார்.