Category:
Created:
Updated:
சிங்கப்பூர் அரசு வருடந்தோறும் மத நல்லிணக்கம் மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகளை 12 பேருக்கு சிங்கப்பூர் அரசு வழங்கியுள்ளது.
அந்த 12 பேரில் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழகத்தின் இராமாநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நஷ்ஹத் பஹீமா என்ற பெண்மணி மனித நேய பணிக்கான விருதை பெற்றுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப் நஷ்ஹத் பஹீமாவுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.மதம்,இனவெறி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக இந்த விருதை நஷ்ஹத் பஹீமாவுக்கு அளித்துள்ளது சிங்கப்பூர் அரசு.
இந்த விருதினை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,தொடர்ந்து மத நல்லிணக்கம் நிலைத்திட பணியாற்றுவேன் என்றும் விருது பெற்ற பஹீமா கூறியுள்ளார்.