Category:
Created:
Updated:
14 வயது பள்ளி மாணவன் ஒருவருடன் இரண்டு மாதங்களாக பாலியல் உறவு வைத்துக்கொண்ட 31 வயது ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக தன்னிடம் படிக்கும் 14 வயது மாணவனுடன் பாலியல் உறவு வைத்துள்ளதாக தெரிகிறது
இது குறித்து மாணவன் தனது பெற்றோரிடம் ஒரு கட்டத்தில் கூறிய போது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி ஆசிரியையிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது 14 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதை ஆசிரியை ஒப்புக்கொண்டார்
ஆசிரியையை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.