சினிமா செய்திகள்
நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் தனுஷ்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
Ads
 ·   ·  8072 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மதுவினால் தாத்தா மற்றும் பேரன் மரணம்

குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் - விஜயா தம்பதியர். இவர்களுக்கு ரூத்தேஷ் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவன் ரூத்தேஷின் தாத்தா சின்னசாமி (வயது 62) வீட்டில் மது அருந்தியுள்ளார்.

 

பிறகு பாட்டிலில் மீதமிருந்த மதுவை அப்படியே வைத்துவிட்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் கவனக்குறைவாக தாத்தா வைத்திருந்த மது சிறுவன் கண்ணில் பட்டுள்ளது. ரூத்தேஷ் குளிர்பானம் என்று நினைத்து அந்த மதுவை குடித்துள்ளார்.

 

மதுவை குடித்தவுடன் சிறுவனுக்கு புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட குடும்பத்தினர் முதியவரை கடுமையாக திட்டிவிட்டு சிறுவனை கவனித்துள்ளனர். மறுபுறம் முதியவர் சின்னசாமி மயங்கி கீழே விழுந்துள்ளார். சிறுவனுக்கும் மூச்சுத் திணறல் விடாமல் நீடித்ததால், உடனடியாக ரூத்தேஷ், சின்னசாமி ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதியவர் சின்னசாமி ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுவன் ரூத்தேஷின் உடல்நிலை மோசம் அடையவே, மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் உயிரிழந்தார். மது உட்கொண்ட நிலையில் தாத்தா மற்றும் பேரன்‌ இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது குறித்து வேலூர் திருவலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 

காவல் துறை தரப்பிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இந்த சம்பவத்தில் தாத்தா மற்றும் மகள் வழி பேரன் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த முதியவருக்கு ஏற்கெனவே இதய கோளாறு உள்ளது. ஆனாலும் அவர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மதுவை முதியவர் வீட்டில் அருந்திவிட்டு, மீதமிருந்த கொஞ்சம் மதுவை பாட்டிலோடு வைத்துள்ளார். இதை பேரன் குளிர்பானம் என்று நினைத்து அருந்தியதால் புரையேறி தொடர்ந்து இருமல் வந்துகொண்டிருந்தது. இதனால் முதியவரை வீட்டிலிருந்தவர்கள் திட்டியுள்ளனர். 

 

பேரன் நிலையை பார்த்த அதிர்ச்சியில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் தாத்தா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். பேரன் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். தற்போது வந்துள்ள உடற்கூராய்வு அறிக்கையில், முதியவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்றும், பேரன் மது உட்கொண்டதால் ஏற்பட்ட தொடர் புரை காரணமாக உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

 

தமிழ்நாட்டில் இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை மூடுக என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது தான் தாத்தாவும், பேரனும் உயிரிழப்பதற்கு காரணம் ஆகும். ஒரே நேரத்தில் தாத்தாவையும், பெயரனையும் இழந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகத்தை யாராலும் போக்க முடியாது. 

 

மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மதுக்கடைகளை திறந்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வரும் தமிழ்நாடு அரசு தான், இந்த இரட்டை உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். பாமக கொள்கையைப் பின்பற்றி தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவிலக்கை ஆதரிக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சரும் மது விலக்கை வலியுறுத்தியவர் தான். இப்போதும் மதுவிலக்கில் அவருக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

  • 684
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads