Category:
Created:
Updated:
இலங்கையில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 786 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 521,218 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (03) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,102 ஆக அதிகரித்துள்ளது.