
மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் வாராந்த பணிக்குழு கூட்டம் (30) ராஜயகிரியவிலுள்ள செயற்பாட்டு மையத்தின் அலுவலகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கொவிட் - 19 பரவல் தடுப்புச் செயற்பாடுகள் நவடிக்கைகள் தொடர்பிலான முன்னேற்றங்கள், தொடர்ச்சியாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் தற்போது இடம்பெற்று வரும் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம், வைரஸ் திரிபு நிலவரங்கள், எதிர்காலச் செயற்பாடுகளுக்கான கண்காணிப்புச் செயற்பாடுகள் என்பன தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.
42 நாட்களுக்குப் பின்னர் நேற்று (01) நீக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் விளைவாக உயிரிழப்புக்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெருமளவில் சரிவை காணமுடிவதாகவும் தளபதி சுட்டிக்காட்டினார்.