
இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் முகம்மது பிட்ரி ( வயது 24). கடந்த சனிக்கிழமை அன்று பைக்கில் சென்ற போது வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகி மயங்கி விழுந்தார். அவர் தன்னுடைய கையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அணிந்திருந்தார். இந்த வகை வாட்ச் விபத்து கண்டறிதல், ஈசிஜி டிராக்கர், அவசர அழைப்பு ஆகிய நவீன வசதிகளைக் கொண்டது.
இந்த வாட்ச் தொழில்நுட்பம் பயனருக்கு விபத்தின் போது எச்சரிக்கையை அனுப்பும் பயனரிடமிருந்து பதில் வரவில்லை என்றால், உடனே அவசர அழைப்புக்கு செய்தியை அனுப்பும்.
விபத்துக்குப் பிறகு, பிட்ரியின் வாட்ச் எச்சரிக்கை எழுப்பியது அவர் பதிலளிக்கத் தவறியதால் அவரது அவசர கால தொடர்புகள் மற்றும் அவசர சேவைக்கு அவர் இருக்கும் இடத்தின் இருப்பிடத்தையும் சேர்த்து குறுஞ்செய்தி அனுப்பியது. இதன் மூலம் அவர் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.