சினிமா செய்திகள்
வருண் நடிப்பை பாராட்டிய கௌதம மேனன்
பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறனுக்காக புகழ்பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ச
உங்க படத்தில் நடிக்க மாட்டேன்!.. பாக்கியராஜ் பிரச்சனையில் தலையிட்ட பாரதிராஜா
16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படத்திலேயே நடிகர் கமல்ஹாசனுக்கு கோவனம் கட்டி வித்திய
அனிமல் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தின் இயக்குநரை வெளுத்து வாங்கிய குஷ்பு
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் ப
"அவர் பண்ணதும் தப்பு, நான் பண்ணதும் தப்பு" - மன்னிப்பு கேட்டார் சிவகுமார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள  கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா  கட
மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை
சினிமாவில் கோலோச்சிய எம்ஜிஆர் அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன். எம்ஜிஆர் யாரையும் மிரட்டவோ, யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்ட
நடிகர் செந்தாமரையோடு நடிக்க மறுத்த நடிகை
நடிகர் செந்தாமரையின் மனைவி நடிகை கௌசல்யா சமீபத்தில் அவருடைய காதல் திருமண வாழ்க்கையை குறித்து பல தகவல்களை கூறியிருக்கிறார். நடிகர் செந்தாமரை பார்ப்பதற்
பேபி பம்ப் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரி
சட்டையை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்
தன்னுடைய திறமை மூலம் பட வாய்ப்பை தேடிய திருநெல்வேலி பொண்ணு தான் ரம்யா பாண்டியன். இவரின் சித்தப்பா அருண் பாண்டியன், தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாள
பிரபல நடிகை, தயாரிப்பாளராக ஆசைப்பட்டு கடனில் மூழ்கி வீட்டை விற்ற சோகம்
1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் பிரபலமான நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். குறிப்பாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராகவும் நடிகை ரம்பா இருக
குணசித்திர நடிகராக ஜொலித்த கோவை செந்தில்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் குமாரசாமி என்ற கோவை செந்தில் (வயது 74). பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்
கார்த்தியின் அடுத்த படம் பற்றிய அப்டேட்
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குநர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது.
தயாராகிறது அனுஷ்காவின் 50 ஆவது படம்
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அ
Ads
 ·   · 7293 news
 •  · 5 friends
 • I

  9 followers

வேலைக்காரி வேடத்தில் கொள்ளைக்காரி

கும்பகோணம், பாபநாசத்தில் வீட்டு வேலைக்காரி போல் நடித்து உரிமையாளருக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற பலே திருடியை போலீசார் தேடி வருகின்றனர்.

பாபநாசம் தெற்கு வீதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர்கள் தஞ்சை பாபநாசம் சாலையில் முத்து மெஸ் கிராமிய முறை சமையல் என்ற சைவ உணவு விடுதியை‌ நடத்தி வருகின்றனர். 

இவர்களது உணவு விடுதிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உணவு வாங்க வந்த பெண் ஒருவர், விஜயலட்சுமியிடம் தன்னுடைய பெயர் சாந்தா எனவும், கிடைக்கும் வேலைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது தனக்கு வேலை எதுவும் இல்லை என்றும், எனவே தங்கள் உணவு விடுதியில் வேலை வழங்குமாறு கேட்டுள்ளார்.

விஜயலட்சுமி தன்னுடைய கணவரிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என கூறி அனுப்பியுள்ளார். பின்னர் தனது கணவர் திருநாவுக்கரசுவிடம் பெண் ஒருவர் வேலை கேட்டு வந்ததையும், எனக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால், அந்தப் பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்ளட்டுமா என கேட்டுள்ளார்.

திருநாவுக்கரசு சம்மதம் தெரிவித்து, நேற்று அந்தப் பெண்ணை அழைத்து முகவரி மற்றும் அவர் குறித்த தகவல்களை சேகரித்து, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டு நாளை முதல் வேலைக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளார். அதன்படி இன்று காலை வீட்டு வேலைக்கு சாந்தா வந்துள்ளார்.

திருநாவுக்கரசு கும்பகோணத்திற்கு சென்று வருவதாக தனது மனைவி விஜயலட்சுமியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் விஜயலட்சுமி வேலைக்காரி சாந்தாவுடன் இருந்துள்ளார். அப்போது சாந்தா விஜயலட்சுமிக்கு காப்பி போட்டுக் கொடுத்துள்ளார். அதனை குடித்த விஜயலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கினார். 

சாந்தா விஜயலெட்சுமி அணிந்திருந்த தாலிசெயின், வளையல், மோதிரம், தோடு உள்பட 6 1/2 பவுன் நகையை திருடி சென்று விட்டார். இதையடுத்து கும்பகோணத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்த திருநாவுக்கரசு, வீட்டில் தனது மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு வேலைக்காரி சாந்தாவை அழைத்துள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லை. 

விஜயலட்சுமி அணிந்திருந்து நகைகள் அனைத்தும் காணாமல் போயிருப்பதை பார்த்த அவர், வீட்டு வேலைக்காரி போல் நடித்து தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை சாந்தா திருடிச் சென்றிப்பதை அறிந்தார்.

திருநாவுக்கரசு பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, தலைமை காவலர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

திருநாவுக்கரசு போலீசாரிடம் சாந்தாவின் முகவரி உள்ளிட்ட விவரங்களை வழங்கினார். அதனைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்தும் போலி என தெரியவந்தது. பின்னர் திருநாவுக்கரசர் தனது செல்போனில் எடுத்த சாந்தாவின் படத்தை போலீசிடம் வழங்கினார்.

போலீசார் அந்த மோசடி பெண்ணின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விஜயலட்சுமிக்கு அதிக அளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 604
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads