வீடு தேடி பள்ளிகள் திட்டம் – தமிழக அரசு
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் எடுக்க ’வீடு தேடி பள்ளிகள்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவரவுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது ’வீடு தேடி பள்ளிகள்’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் எடுப்பார்கள். விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை சென்னையில் இருந்து துவங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் வேறு திட்டத்தை செயல்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.