Category:
Created:
Updated:
உலக அளவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின்னர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம், அந்நாட்டில் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்புசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.