Category:
Created:
Updated:
இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை 18-12-2020 கோவிட்-19 தொற்றுகளில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 708 ஆக உயர்வடைந்தது.இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27,061 ஆக உயர்வடைந்துள்ளது.மேலும், 35,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 8,312 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்திய கண்காணிப்பில் 467 பேர் உள்ளனர்.இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 160 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (18-12-2020) இதுவரை 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 21 வயதுடைய இரு பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.