சசிகலாவின் ரூ.100 கோடி பங்களா முடக்கம்
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர். சென்னை போயஸ் தோட்டத்தில் வேதா நிலையம் எதிரே 22 ஆயிரத்து 460 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடமும் அடங்கும். ஆலந்தூர், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 200 ஏக்கர் நிலங்கள் உள்பட ரூ.300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
2020-ம் ஆண்டு கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் உள்பட 65 சொத்துகள் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.