தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.900ஐ தாண்டியது
தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது. சிலிண்டர் ஒன்றின் விலை 875 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. வணிக அளவில் பயன்படுத்தபப்டும் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.285 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் மக்கள் வருவாய் இன்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்கு உள்ளாகி வரும் சூழலில், சிலிண்டர் விலை உயர்த்தப் பட்டிருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கூறப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 25 ரூபாய் அதிரடியாக உயர்த்தி மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.