நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே என் நிலை - ஓ.பன்னீர் செல்வம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம். பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம் என கூறினார்.
வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து குழந்தைக்கு கூட தெரியும். தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா ? என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவை முன்னவர் துரைமுருகன் கேள்வி விடுத்தார்.
அதற்கு ஓ.பன்னீர் செல்வம் நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு,இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை என கண்ணதாசன் பாடல் வரியை குறிப்பிட்டார்.