Category:
Created:
Updated:
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராகவும், எம்.பியாகவும் பதவி வகித்தவர் மூத்த தலைவர் இல.கணேசன். முன்னதாக பாஜக தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் உள்ளிட்டவர்களுக்கு மாநில ஆளுனர், இணையமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டன.
பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுனராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவியேற்றுக்கொண்டார். இவர், தமிழக பா.ஜ.க. தலைவராக, பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவராக, ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.