Category:
Created:
Updated:
காபூல் விமான நிலையம் அருகே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவால் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள், 60 ஆப்கானியர்கள் என மொத்தம் 73 பேர் உயிரிழந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காபூல் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காபூல் குண்டுவெடிப்பு சம்பவம் நடக்க ஒருபோதும் அனுமதித்திருக்ககூடாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தை பைடன் நிர்வாகம் கையாள்வதையும் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.