Category:
Created:
Updated:
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் பாதையில் முக்கிய மாற்றங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்டு மக்களுக்கு மகத்தான சேவைகளை ஆற்றிய அரசியல்வாதியாக மங்கள சமரவீரவை குறிப்பிட முடியும் என்றும் ஜனாதிபதியின் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் திடீர் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஆழ்ந்த அனுதாபம் வெளியிட்டுள்ளார்.
மங்கள சமரவீர அரசியலில் தம்முடன் மிகவும் நெருங்கி பழகியதாகவும் தமது அரசியல் வாழ்வுக்காக மகத்தான பங்களிப்புகளை வழங்கிய அரசியல்வாதியாகவும் அவரை குறிப்பிட முடியும் என்று பிரதமரின் அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது