Category:
Created:
Updated:
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 58,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வௌியேறும் 13 இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வீதித் தடையில் நேற்றைய தினம் 1,028 வாகனங்களும் மற்றும் 1,807 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.