Category:
Created:
Updated:
தமிழகத்தில் ஊரடங்கு காலம் முடிவடைய உள்ள நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்துகிறார். அவர் தலைமையில் பிற்பகல் 12.30 மணியளவில் நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.