
24 மணிநேரமும் 2 வது அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள்
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய, இராணுவ நோய்த் தடுப்பு மற்றும் மனநல பணிப்பகத்தின் வழிகாட்டலுக்கமைய தேசிய தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சிப்பாய்களால் கொழும்பு விகாரா மகா தேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் மற்றும் பத்தரமுல்லை ´தியத உயன´ இராணுவ தடுப்பூசி மையத்தில் ஆகஸ்ட் (02) ஆம் திகதி தொடக்கம் புதன் கிழமை வரையில் அஸ்ட்ரா செனகா (கொவிஷீல்ட்) தடுப்பூசிகளை 24 மணிநேரமும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கொழும்பு நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை, பனாகொட போதி ராஜாராமயா (இராணுவ விகாரை) மற்றும் வஹெரஹர இராணுவ மருத்துவப் படை முகாம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் ஆகஸ்ட் (01) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரையிலும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய இராணுவ நோய்த் தடுப்பு மற்றும் மனநல சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் சவீன் சேமகே தலைமையிலான இராணுவ வைத்திய குழுக்களினால் தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஆரம்பம் முதல் கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையத்தின் தலைவரின் வழிக்காட்டலின் கீழ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.