Category:
Created:
Updated:
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட 701 கிலோகிராம் மஞ்சள் கற்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கற்பிட்டி – கப்பலடி கடற்பிராந்தியத்தில் மிக சூட்சுமமாக, மணலுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
மஞ்சள் தொகை புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.