கொரோனா வைரஸ் எப்போது முடிவிற்கு வரும்?
கொரோனா வைரஸ் தொற்று பரவல் எப்போது முடிவிற்கு வரும் என்பது இன்று பலர் மத்தியில் உள்ள கேள்வியாகும்.
உலகம் முழுக்க கொரோனா பரவல் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. அதிகம் தடுப்பூசி ஏற்றப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட கொரோனா பரவல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. உலகம் முழுக்க 192,848,567 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் ஆதனாம் [Tudors Adhanom Ghebreyesus] இதற்கு பதில் அளித்துள்ளார்.
4,142,769 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க தற்போது பல நாடுகளில் மூன்றாம் அலை, நான்காம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,341,682 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் ஆதனாம் கொரோனா பரவல் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு முக்கியமான அறிவிப்போடு உங்களை சந்திக்கிறேன். உலகம் முழுக்க கொரோனா பரவலை மொத்தமாக தடுக்க மக்கள் உதவ வேண்டும். கொரோனாவிற்கு எதிராக மக்கள் முறையாக செயல்பட்டால் புதிய அலைகளில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியும என்று தெரிவித்துள்ளார்.
புதியதாக தொற்றுக்குள்ளாவோரை வேகமாக கண்டுபிடிக்க வேண்டும். உடனே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா மேலும் பரவுவது தடுக்கப்படும். வேகமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரை கண்டுபிடிப்பதன் மூலம் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும்.