
போப் பிரான்சிஸ் காலமானார்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) காலமானார். அவருக்கு வயது 88. Pope Francis no more
இதுதொடர்பாக, வாடிகன் கார்டினல் கெவின் ஃபாரெல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அன்புள்ள சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை போப் பிரான்சிஸ் மறைவை நான் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறேன். இன்று காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்” என்று தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ், கடந்த 2013-ஆம் ஆண்டு தனது 76 வயதில் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 12 ஆண்டுகள் போப்பாக இருந்தார்.
கடந்த சில மாதத்திற்கு முன்பாக அவர் நிம்மோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தான் காய்ச்சலில் இருந்து குணமடைந்த நிலையில், ஈஸ்டர் மறுநாளான இன்று அவர் மறைந்திருப்பது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை சோகத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
தனது இறுதிச்சடங்கை எளிய முறையில் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு போப் வேண்டுகோள் விடுத்தார். அதாவது… புதிய இறுதிச்சடங்கின்படி போப் உடல் துத்தநாகத்தால் மூடப்பட்ட சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படும். இதற்கு முன்பாக மூன்று சவப்பெட்டிகளுடன் போப் உடல் அடக்கம் செய்யப்பட்டது