சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை புறக்கணிக்கக்கோரி தமிழர்கள் ஆர்பாட்டம்
டிசம்பர் 9ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டோர் நினைவாகவும் இனஅழிப்புகளைத் தடுப்பதற்காகவுமான நாளாக அனுட்டிக்கப்படுகிறது. அதனையொட்டி பெருமளவிலான பிரித்தானியத் தமிழர்கள் சிறிலங்காவிலிருந்து அந்த அரசிற்கு அன்னியச் செலாவணி ஈட்ட இறக்குமதி செய்யும் பொருட்களை புறக்கணிக்கக்கோரி பிரபல வர்த்தக நிலையங்களின் வெளியே கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினார்கள்.
Marks & Spencer, NEXT, Tesco, ASDA, Sainsbury’s, Waitrose, Victoria’s Secret, H&M போன்ற நிறுவனங்கள் பாரிய அளவில் சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை விற்பனை செய்கின்றன. அவற்றின் பல கிளைகளின் வெளியே சிறிலங்காவின் இனஅழிப்பு பற்றிய தகவல்கள் தாங்கிய சுலோக அட்டைகளுடன் நின்ற பிரித்தானியத் தமிழர்கள் அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் அது பற்றி விளக்கி, முடிந்தவரையில் அப்பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அது மட்டுமல்லாமல் சிறிலங்கா உற்பத்திகளுக்குப் பதில் வேறு எவற்றை வாங்கலாம் என்ற அறிவுரைகளையும் வழங்கினர்.
குறிப்பாக சிறுவர்கள் சிறுமியர் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு வேற்றின மக்களுக்கு இது தொடர்பாக விவரித்த விடையம். பலரது கவனத்தை ஈந்துள்ளது.