Category:
Created:
Updated:
இங்கிலாந்தை சேர்ந்த சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித். இவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் எனக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மிக லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் பதிவு செய்துள்ளார்.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு லேசான பாதிப்பு தான் ஏற்படும் என்று கூறப்படுகிறது.