Ads
70,200 பைசர் தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்தடைந்தன
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பைசர் தடுப்பூசியின் 70,200 தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்த அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஷேட குளிரூட்டலின் அடிப்படையில் குறித்த தடுப்பூசிகள் கொழும்பு மத்திய சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Info
Ads
Latest News
Ads