Ads
அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பிரிங் பகுதியில் குழந்தைகளுக்கான நீர்பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த பூங்காவில் ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் தோல் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு 60க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்து தீயணைப்பு படை வீரர்களும் பூங்காவுக்கு வந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 26 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், பாதிக்கப்பட்ட வேறு 39 பேர் சிகிச்சைக்கு செல்ல மறுத்து உள்ளனர் என நியூயார்க் போஸ்ட் தெரிவித்து உள்ளது. கந்தக அமிலம் மற்றும் ரசாயன பொருட்கள் கலந்து இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பூங்கா மூடப்பட்டு உள்ளது.
Info
Ads
Latest News
Ads