Ads
கொரோனாவின் மூன்றாவது அலை : ஒகஸ்ட் இறுதியில் இந்தியாவை தாக்கும்
இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஒகஸ்ட் மாதத்தின் இறுதியில் தாக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட தீவிரம் குறைந்ததாகவே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவரான சமீரன் பண்டா, நாடு தழுவிய அளவில் மூன்றாவது அலை இருக்கக்கூடும் என்றாலும் இரண்டாவது அலைப்போல் தீவிரமாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்வது, முதல் இரண்டு அலைகளில் பொதுமக்களிடையே ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, நோய் எதிர்ப்புச் சக்தியை மீறி பரவக்கூடிய உருமாற்ற வகை உருவாகுவது ஆகிய காரணிகள் மூன்றாவது அலைக்கு வித்திடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads