மீன்பிடிக்கச் சென்ற மூவர் மாயம்
புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (9) கற்பிட்டியிலிருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 10 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21) திருமணமான மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த மீனவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை என கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் மூன்று மீனவர்களின் குடும்பத்தினர்களும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினர்.