இராணுவத்தின் உலர்ந்த மிளகாய் செய்கை வெற்றி
அரசாங்கத்தின் “சௌபாக்ய தெக்ம” கொள்கைத் திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணியகத்தினால் இராணுவ தளபதியின் நாட்டை செழிப்பூட்டுவதற்கான “துரு மித்துரு நவ ரட்டக்” நடுகை திட்டத்தை மையப்படுத்தி வவுனியா கந்தகாடு மெனிங் பண்ணை மற்றும் ஆண்டியபுலியன்குளம் இராணுவ பண்ணை உள்ளடக்கிய 200 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட உலர்ந்த மிளகாய் செய்கை வெற்றியளித்துள்ளது.
கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் அனுதிக்கப்பட்ட 79 மில்லியன் ரூபாய் நிதியை கொண்டு கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிளகாய் பயிர் செய்கை, பயிர் செய்கைக்கு தகுந்த வகையில் வரம்புகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணியகத்திற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய ஆரம்பிக்கப்பட்டிருந்தது.