கொரோனா நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும்
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் காசநோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், காசநோய் பாதிப்பு திடீரென்று அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் மத்தியில்தான் காசநோய் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
நாள்தோறும் காசநோய் தொற்றுக்கு ஆளோவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவர்கள் கவலையடைந்து உள்ளனர். இதற்கு மத்தியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமானது, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து மாநில அரசுகளுக்கு அனுப்பிய அறிவுறுத்தலில், காசநோய், கொரோனா தொற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காசநோய் தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.