Category:
Created:
Updated:
ஹொரணை - பாணந்துறை பிரதான வீதியின் குலுபன பிரதேசத்தில் இரண்டு வேன் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
குறித்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட போது ஒரு வேன் வாகனத்தினுள் சிக்கி இருந்த காயமடைந்தவர்கள் பெரும் சிரமத்துக்கு பின்னர் வௌியில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் வருகை தந்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.