சிவசங்கர் பாபாவுக்கு 27ம் தேதி வரை சிறை
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதிவான நிலையில், மேலும் 2 போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.
மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி தகவல் தெரிவித்திருக்கும் நிலையில், அவர் மீதான 3 வது வழக்கும் போக்சோவாக மாற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அவரை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை ஜூலை 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.