வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நாட்கள் குறைப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பணியாளர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்கள், ஹோட்டல்கள் அல்லது தனியார் இடங்களில் 14 நாநட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அதன் பின்னர் அவர்களுக்கு மேற்கொள்ளப்படகின்ற பீசீஆர் பரிசோதனை முடிவுகளுக்கயை கொரோனா தொற்று உறுதியாகுபவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அவர்களின் பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றவிலலை என்றாலும் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் முறை ஒன்றே இலங்கையில் காணப்பட்டது.
அதற்கமைய அந்த முறையில் மாற்றம் மேற்கொள்ளும் வகையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றவில்லை என உறுதியாகினால் அவர்கள் இனிமேல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை என குறிப்பிடப்படுகின்றது.