Ads
தமிழகத்தில் 3,300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருப்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்தால் தேவையான சிகிச்சை வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க கூடிய 59 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து கையிருப்பில் உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் என கூறியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads