8 மாநில கவர்னர்கள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட இருக்கின்ற நிலையில் பல மாநிலங்களில் திடீரென கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 8 மாநிலங்களில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 4 மாநில கவர்னர்கள் வேறு மாநிலங்களுக்கு கவர்னராக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக கவர்னர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.
1. மிசோரம் மாநில கவர்னராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை, கோவா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. அரியானா கவர்னராக இருந்த சத்யதேவ்நாராயண் ஆர்யா, திரிபுரா கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. திரிபுரா கவர்னராக உள்ள ரமேஷ் பயாஸ், ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. இமாச்சலபிரதேச கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, அரியானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக மத்திய மந்திரி தாவர்ச்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. மிசோரம் மாநில கவர்னராக ஹரிபாபு கம்பாம்பதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. மத்தியபிரதேச கவர்னராக மங்குபாய் ஜகன்பாய் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. இமாச்சலபிரதேச கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.