தமிழகத்தில் 4000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 157791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 3867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 96 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இணை நோய்கள் இல்லாத 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 33005 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 4382 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 27 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 35294 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.