தடுப்பூசி போட்ட இருவருக்கு நேர்ந்த விபரீதம் அச்சத்தில் இங்கிலாந்து மக்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிப்சர் (pfizer) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோ என் டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்து 90% நல்ல பலனை அளித்தது.
இந்த நிலையில் இந்த மருந்து முதற்கட்டமாக இங்கிலாந்தை சேர்ந்த முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களுக்கும், NHSயை சேர்ந்த செவிலியர்களுக்கும் செலுத்தப்பட்டது.
அப்போது இரண்டு செவிலியர்களுக்கு அலர்ஜி ஏற்பட்ட செய்தி இங்கிலாந்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அவர்கள் இருவரும் ஏற்கனேவே இரத்தக்கொதிப்பு மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த அட்ரினலின் ஓட்டோ இன்ஜெக்டர் Adrenaline Auto-Injector எனும் கருவிகளை பயன்படுத்துவதாகவும்,
அதனால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போது அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக இருவரும் குணமாகியுள்ளனர்.
இதேவேளை முன்னதாகவே ஃபிப்சர் நிறுவனம் நோய் மற்றும் அலர்ஜிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டாம் என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.