"எட்ட வேண்டிய இலக்குகள் ஏழு" - ஸ்டாலின் அறிவுறுத்தல்
மாநில வளர்ச்சி குழு கொள்கை உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கிடு செய்த பின் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயரஞ்சன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் கல்வி, வளரும் வாய்ப்புகள், மகசூல் பெருக்கம், குறையாத தண்ணீர், உயர்தரக்கல்வி மற்றும் மருத்துவம், எழில்மிகு மாநகரம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு என அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளில் ஏழு இலக்குகளை அடைய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 1971 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருணாநிதி அவர்களால் மாநில திட்டக்குழு உருவாக்கப்பட்டது. அது முதல்வரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வந்தது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை ஆராய்ந்து அறிக்கையாக அரசுக்கு வழங்குவது, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் புது ஆலோசனைகள் அளிப்பது அக்குழுவின் செய்லபாடாக இருந்து வந்தது. இந்நிலையில் மு.க ஸ்டாலின் அவர்கள் மாநில திட்டக்குழுவை, மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்து அறிவித்துள்ளார்.
அதற்கான உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டப்பின் தமிழக முதலமைச்சர் தலைமையில் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைப்பெற்றது.
வளரும் வாய்ப்புகள், மகசூல் பெருக்கம், குறையாத தண்ணீர், உயர்தரக்கல்வி மற்றும் மருத்துவம், எழில்மிகு மாநகரம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு என அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளில் ஏழு இலக்குகளை அடைய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வி, மருத்துவம் ,விவசாயம், குடிநீர் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அதில் ஆலோசனை வழங்கியுள்ளார்.