Category:
Created:
Updated:
அதிமுகவிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். இதனால் சசிகலாவுடன் பேசி வரும் சிலர் சமீப காலமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தொடர்ந்து தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சசிகலா 10 பேரிடம் அல்ல.. ஆயிரம் பேரிடம் பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அந்த அம்மாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.