சினிமா செய்திகள்
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
Ads
 ·   ·  7493 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆப்பிள் ஐபோன், மேக்புக் ஏர் சாதனங்களை இதயத்துக்கு அருகே கொண்டு செல்லாதீர்

உடலுக்குள் பொருத்தப்பட்டு இருக்கும் பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்களிலிருந்து, சில ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான தயாரிப்புகளை பாதுகாப்பான தொலைவில் வைக்குமாறு ஆப்பிள் நிறுவனமே அறிவித்து இருக்கிறது.

ஆப்பிள் நிறுவன சாதனங்களில் எந்த மாதிரியானவைகளை எல்லாம் பாதுகாப்பான தொலைவில் வைக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தன் வலைதளத்திலேயே பட்டியலிட்டு இருக்கிறது.இதில் ஏர்பாடுகள் மற்றும் சார்ஜிங் கேஸ்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் அதன் உதிரி பாகங்கள், ஹோம்பாடுகள், ஐபேடுகள், ஐபோன் மற்றும் மேக் சேஃப் உதிரிபாகங்கள், மேக் மற்றும் அதன் உதிரி பாகங்கள், பீட்ஸ் என பல்வேறு கருவிகளையும் மருத்துவ சாதனங்களை பொருத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பான தொலைவில் வைக்க வேண்டும் என பட்டியலிட்டு இருக்கிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக விற்பனையாகி வரும் ஆப்பிள் ஐபோன் 12 ரகங்கள், ஆப்பிள் மேக்புக் ஏர், ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ போன்றவைகளும் அடக்கம்.

மேக்ரூமர்ஸ் என்கிற வலைதளம் தான் முதலில் இப்பட்டியலைக் கண்டுபிடித்தது, அதோடு ஐபோன் 12 மருத்துவ சாதனங்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சியையும் குறிப்பிட்டது.ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மேக் சேஃப் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் காந்தம், மருத்துவ சாதனங்களின் செயல்பாட்டில் தலையிடலாம் என்கிற ஆராய்ச்சி, ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் என்கிற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.ஆப்பிள் நிறுவனத்தின் மேக்சேஃப், அதிவேக வொயர்லெஸ் சார்ஜிங்குக்கு உதவுகிறது. ஆப்பிள் ஐபோன் 12-ல் பயன்படுத்தப்பட்டு இருக்கும் காந்தத்தின் வலிமையைக் கண்டு தாங்கள் ஆச்சர்யப்பட்டு போனதாக, அவ்வாராய்ச்சியின் முதன்மை ஆய்வாளர்கள் முனைவர் மைக்கெல் வூ பத்திரிகையாளர்களுக்கான செய்திக்குறிப்பு ஒன்றில் எழுதியுள்ளார். "பொதுவாக, காந்தங்கள் பேஸ்மேக்கர் போன்றவைகளின் நேரத்தை பாதிக்கலாம் அல்லது பொருத்தப்பட்டிருக்கும் டீஃப்ரெபிலேட்டரை செயலிழக்கச் செய்யலாம். அது பொருத்தப்பட்டிருப்பவரின் உயிரைக் காக்கும் செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. இதயம் சார்ந்த மருத்துவக் கருவிகளின் செயல்பாட்டை, எலெக்ட்ரானிக் கருவிகளில் பொருத்தப்பட்டிருக்கும் காந்தங்கள் பாதிக்கலாம் என்பதை அனைவரும் அவசரமாக உணர வேண்டும் என்பதை இவ்வாராய்ச்சி உணர்த்துகிறது.

ஆப்பிள் நிறுவனம் பட்டியலிட்டு இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை, மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஆறு அங்குலம் (15 சென்டிமீட்டர்) தொலைவாக வைக்க வேண்டு என குறிப்பிட்டு இருக்கிறது. ஒரு வேளை வொயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சாதனங்கள் என்றால் 30 சென்டிமீட்டர் இடைவெளி விட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறது.

சில ஆப்பிள் வாட்சுகள் நம் உடலின் எலெக்ட்ரோ கார்டியோகிராமை எடுக்கும் திறன் கொண்டது. அதில் மின்சார சிக்னலின் நேரம் மற்றும் வலிமை தான் மனிதர்களின் இதயத் துடிப்பைத் தீர்மானிக்கிறது. சில நேரங்களில் காந்தங்கள் மற்றும் மின்காந்த விசையினால் மருத்துவ கருவிகளின் செயல்பாடுகளில் தலையீடுகள் ஏற்படலாம் என்கிறது ஆப்பிள்.

ஆப்பிளைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் கெலாக்ஸி எஸ் 21 சீரிஸ் போன்களில் உள்ள காந்தங்கள் மனிதர்களின் உடலில் இருக்கும் மருத்துவ கருவிகளின் செயல்பாட்டை பாதிக்கலாம். இது தொடர்பாக மருத்துவர்களை அணுகுமாறு சாம்சங் தன் வலைதளத்தில் கூறியுள்ளது. 

மேரி மொய்க்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அவர் நிமோனிக் (Mnemonic) என்கிற நிறுவனத்தில் கணிணி பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அவர் இந்த தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்துவிட்டு, தான் இது குறித்து கவலை கொள்ளவில்லை என்கிறார்."இந்த ஆப்பிள் சாதனங்கள் அத்தனை அதிக காந்த விசையை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அல்லது வெல்டிங் இயந்திரங்களுக்கு அருகில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட ஒருவர் செல்லும் போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.ஆப்பிள் ஐபோன் 12-ல் பயன்படுத்தப்பட்டு இருக்கும் காந்தங்களால், பேஸ் மேக்கர்களை பாதுகாப்பு மோடுக்கு மாற்ற முடியும். அந்த மோடுக்கு பேஸ் மேக்கர் மாறினாலும், தொடர்ந்து செயல்படும். ஐபோனை நீக்கிவிட்டால் மீண்டும் பேஸ் மேக்கர் தன் போக்கில் செயல்படத் தொடங்கும் என்கிறார் மேரி. "ஒருவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு இருக்கிறது என்றால் கூட அவர் தாராளமாக ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தலாம். பேஸ்மேக்கருக்கு அருகிலிருந்து போன்கள் நீக்கப்பட்ட உடனேயே பேஸ்மேக்கர்கள் மீண்டும் வழக்கம் போல இயங்கத் தொடங்கும்" என்கிறார் பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பின் மூத்த இருதய செவிலியர் ஜோ விட்மோர்.

  • 843
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads